காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

காவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
Published on

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரான நிலையில், மத்திய அரசு தரப்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. 9 பேர் கொண்ட இந்த அமைப்பில், தலைவர் தவிர 8 பேர் உறுப்பினர்களாக இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16-ஆம் தேதி அளித்த தீர்ப்பை அமல்படுத்தும் அதிகாரமிக்க அமைப்பாக இது இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தனியாக அமைக்கப்படும் என்றும் அதிலும் 9 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம் மிக்க அமைப்பாக இது இருக்கும் என கூறியுள்ள மத்திய அரசு அதற்கு பெயர் எதையும் அளிக்கவில்லை. அந்தவகையில் அந்த அமைப்பின் நிலை, அதை அமல்படுத்துவற்கான காலம் உள்ளிட்டவை குறித்து இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு காலை 11.30 மணியளவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் வரைவு திட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிகாரம்மிக்க காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றே தீர்வு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com