உ.பி: கழிவுநீர் கால்வாயில் மனைவியுடன் விழுந்த காவலர் - பகீர் சிசிடிவி காட்சிகள் வைரல்!

உ.பி: கழிவுநீர் கால்வாயில் மனைவியுடன் விழுந்த காவலர் - பகீர் சிசிடிவி காட்சிகள் வைரல்!
உ.பி: கழிவுநீர் கால்வாயில் மனைவியுடன் விழுந்த காவலர் - பகீர் சிசிடிவி காட்சிகள் வைரல்!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் காவலரும், அவரது மனைவியும் இருசக்கர வாகனத்துடன் கழிவுநீர் கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அம்மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மருத்துவரை பார்ப்பதற்காக அவரது அலிகாரில் உள்ள அவரது மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் தயானந்த் சிங் மற்றும் அவரது மனைவி, ராம்காட் சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அந்தச் சாலை முழுவதும் மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. சாலை தான் அங்கு இருக்கிறது என்று நம்பி காவலர் தயானந்த் சிங் அதில் வாகனத்தை இயக்கியபோது, மழைநீர் மூடிய கழிவுநீர் கால்வாயில் வாகனத்துடன் காவலரும், அவரது மனைவியும் விழுந்தனர்.

இருவரும் கால்வாயில் விழுந்ததை அருகில் இருந்த சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கால்வாய் அருகே ஓடிவந்த அவர்கள் காவலர் மற்றும் அவரது மனைவி இருவரையும் உடனடியாக மீட்டதால் இருவரும் உயிர்தப்பினர். நல்வாய்ப்பாக இருவருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com