மாடுகளை கடத்தி அதிவேகமாக பயணித்த வாகனம்! போலீஸ் துரத்தியதும் மாடுகளை தூக்கி வீசும் வீடியோ!
ஹரியானா மாநிலம் குருகிராமில் மாடுகளை கடத்திவிட்டு அதிவேகமாக பயணித்த வாகனத்தை போலீஸ் துரத்தியதும் மாடுகளை தூக்கி வீசும் பகீர் வீடியோ வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் கடத்தல்காரர்கள் பசுக்களை கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. டிரக் ஒன்றில் ஏழு மாடுகள் கடத்தப்படுவதாக தகவக் வந்துள்ளது. இதையடுத்து புகார் அளிக்கப்பட்ட டிரக்கை காவல்துறையினர் நெருங்கியதும் அது வேகமாக பயணிக்கத் துவங்கியது.காவல்துறையினர் ஓட்டி வந்த போலீஸ் கார்களை இடித்து கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக ஓடும் வாகனத்திலிருந்து மாடுகளை வெளியே வீசத் தொடங்கினர். 22 கிமீ அதிவேக துரத்தலுக்கு பிறகு மாடு கடத்துபவர்கள் போலீசார் மடக்கிப் பிடித்தனர். பசுக்களைக் கடத்தியதாகவும், பசு காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஐந்து பேரை கைது செய்தனர். பசுக் கடத்தல்காரர்களிடமிருந்து சில நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யஹ்யா, பல்லு, தஸ்லீம், காலித் மற்றும் சாஹித் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹரியானா கவுவன்ஷ் சன்ரக்ஷன் மற்றும் கௌசம்வர்தன் சட்டம், 2015 இன் பிரிவு 13(2) (கொலை நோக்கத்திற்காக பசுவை ஏற்றுமதி செய்வதற்கான தண்டனை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 (கொலை முயற்சிக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

