பத்திரிகை அட்டையில் குழந்தைக்கு பாலூட்டும் படம்: மாடல் மீது வழக்கு!
மலையாள பத்திரிகையின் அட்டைப் படத்தில் குழந்தைக்கு பாலூட்டும் படம் வெளியிடப்பட்டதை அடுத்து அந்தப் பத்திரிகையின் பதிப்பாசிரியர் மற்றும் மாடல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாளத்தில் இருந்து வெளிவரும் மாத இதழ், கிருஹலட்சுமி. இதம் இம்மாத அட்டைப்படம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இளம் பெண் ஒருவர் திறந்த மார்புடன் குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. அதற்கு கீழே, ’தாய்மார்களே கேரளாவிடம் சொல்லுங்கள், ’தயவு செய்து அப்படி உற்றுப்பார்க்காதீர்கள், நாங்கள் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்று’ என கேப்ஷன் உள்ளது. இதில் கேரளாவின் கவிஞரும் எழுத்தாளருமான 27 வயது கிலு ஜோசப் மாடலாக நடித்துள்ளார்.
இதையடுத்து பத்திரிகை பதிப்பாசிரியர், மாடல் கிலு ஜோசப் ஆகியோர் மீது கொல்லம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் 16-ம் தேதி விசாரிக்க இருக்கிறது.