மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு

மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு

மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
Published on

பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பதன் காரணம் என்ன என்று விமர்சித்துப் பேசியதற்காக லக்னோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மவுனமாக இருப்பதன் மூலம், தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்துள்ளார். அவருடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என்று பேசினார்.

மேலும், பிரகாஷ்ராஜ் தனது தேசிய விருதுகளை திருப்பி அளிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதை மறுத்து பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவில், “இப்போதுதான் டிவி சானல்களில் பிரகாஷ்ராஜ் தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளை திரும்ப அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் என்று செய்தி போனதை பார்த்தேன். நான் எப்போது அப்படி சொன்னேன்? நான் முட்டாள் இல்லை. தேசிய விருது எனது உழைப்புக்காக வழங்கப்பட்டது. அது எனக்கு கெளரவம். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. கவுரி லங்கேஷ் கொலை நடந்துள்ளது. அதற்கான வலி எனக்குள் உள்ளது. அது ஒரு மனிதாபிமானமற்ற கொலை. என்னுடைய வலியை வெளிப்படுத்த சில கேள்விகளை எழுப்பி இருந்தேன். என் கேள்வி, இந்திய நாட்டின் பிரதமரை சார்ந்து எழுப்பப்பட்டது. பலர் அவரை பின்பற்றுகிறார்கள். இந்த பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு என்ன? அதற்கு அவரது விளக்கம் என்ன? அதை குறித்து அவர் ஏன் கருத்து சொல்லவில்லை. இந்த நாட்டின் குடிமகனாக நான் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளேன். வேதனை அடைந்துள்ளேன். ஆனால் என்னுடைய பிரதமர் மெளனமாக இருக்கிறார். பல எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. கொலை பற்றிதான் நான் பேசியிருந்தேன். ஆனால் பிரகாஷ் ராஜ் தனது விருதுகளை திரும்ப அளிக்க உள்ளார் என பலர் செய்தி போடுகிறார்கள். நான் அப்படி சொல்லவே இல்லை. மேலும் இந்த விஷயத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை என்று பிரகாஷ் ராஜ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com