\
மாட்டிறைச்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மாட்டிறைச்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மாட்டிறைச்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Published on


இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. பசு, எருது, எருமை, கன்று குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட கால்நடைகள் விற்பனைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த அமைப்பு ஒன்று தொடர்ந்த இந்த வழக்கு ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக, இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com