சபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்

சபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்
சபரிமலை விவகாரத்தை திசைத் திருப்ப பாலியல் வழக்கு: உம்மன் சாண்டி புகார்

சபரிமலை விவகாரத்தை திசைத் திருப்பவே என் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் விற்பனை செய்ததில், தொழிலதிபர் சரிதா நாயர் மோசடி செய்ததாக, கடந்த 2013ஆம் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் அரசு அதிகாரிக ளுக்கு தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர் ஜாமினில் வெளிவந்து பரபரப்பு புகாரை தெரிவித்தார். அதில், சோலார் பேனல் விற்பனை பணியை தனது கம்பெனிக்கு வழங்குவதற்கு பலருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், பணத்திற்கு பதில் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார்.

சோலார் பேனல் தொடர்பாக தான் பலமுறை உம்மன் சாண்டியை சந்தித்து பேசியதாகவும்  அப்போது அவரும் தன்னை பாலியல் வன்கொடு மை செய்ததாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி. வேணுகோபால் மற்றும் பல அரசிய ல் பிரமுகர்கள் மீதும் சரிதா நாயர் பாலியல் புகார் கூறியிருந்தார். சரிதாவின் பாலியல் குற்றச்சாட்டை உம்மன்சாண்டி மறுத்திருந்தார்.

இந்நிலையில் ஆட்சி மாறியது. பின்னர், போலீசில் உம்மன்சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது சரிதா நாயர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த புகாரில், உம்மன்சாண்டி மற்றும் கே.சி. வேணுகோபால் மீது தற்போது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.சி. வேணுகோபால் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக உம்மன் சாண்டி கூறும்போது, தற்போது கேரளாவில் சபரிமலை பிரச்னை பெரிதாகி வருவ தால், அதைத் திசைத் திருப்ப, இந்த நடவடிக்கையை மாநில அரசு கையில் எடுத்துள்ளது. இது பொய் புகார். இதை சட்டப்படி சந்திப்பேன். இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை திருவனந்தபுரத்தில் நாளை அறிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com