’’லிஃப்ட் நின்றது குத்தமா?’’-காப்பாற்றப்பட்ட பிறகும் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய நபர்

’’லிஃப்ட் நின்றது குத்தமா?’’-காப்பாற்றப்பட்ட பிறகும் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய நபர்
’’லிஃப்ட் நின்றது குத்தமா?’’-காப்பாற்றப்பட்ட பிறகும் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய நபர்

லிஃப்ட்டில் சிக்கிய நபர் காப்பாற்றப்பட்ட பிறகு வெளியே வந்ததும் தனது குடியிருப்பு பாதுகாவலரை தொடர்ந்து பலமுறை அறைந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

குர்கானின் செக்டார் 50ல் உள்ள க்ளோஸ் என் சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை 7 மணியளவில் லிப்ட்டில் மாட்டியுள்ளார் வருண்நாத் என்ற நபர். அவரை லிஃப்ட் சர்வீஸ் நபர் உடனடியாக வந்து மீட்டுள்ளார். வெளியே வந்த வருண்நாத் உடனடியாக அருகே நின்றிருந்த குடியிருப்பு பாதுகாவலரை திட்டியபடி அவருடைய கன்னத்தில் தொடர்ந்து பலமுறை அறைந்தார். பின்னர் லிஃப்ட் சர்வீஸ்மேனிடம் சென்று அவரையும் அறைந்தார். இத்தனைக்கும் அந்த நபர் லிஃப்ட் சிக்கியிருந்தது 3 - 4 நிமிடங்கள்தான் என்று தெரிவித்துள்ளனர் பிற குடியிருப்பு வாசிகள்.

உடனடியாக அந்த குடியிருப்பின் பாதுகாவலர்கள் ஒன்றுதிரண்டு, '’Down With Varun Nath’’ என்று கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து வருண்நாத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சில நாட்களுக்கு முன் கேட்டை திறக்க தாமதித்த காவலாளியை நொய்டா பெண் ஒருவர் அடித்து அவமரியாதை செய்ததற்காக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com