எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
கர்நாடக தேர்தலில் 104 இடங்களில் மட்டுமே பாரதிய ஜனதா வெற்றி பெற்ற நிலையில் அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க எடியூரப்பா ஆளுநரிடம் உரிமை கோரினார். ஆளுநரும் அவர் பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து நேற்று முன் தினம் இரவு காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாடியது. விடிய விடிய 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து, எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என அறிவித்தது. மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. எடியூரப்பாவின் பதவி தப்புமா..?, அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படுமா என்பது இன்றைய விசாரணையில் முடிவாகும்.

