\
கணினிகள் கண்காணிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கணினிகள் கண்காணிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

கணினிகள் கண்காணிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Published on

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் பத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீ காரம் வழங்கியுள்ளது. உளவுத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு ந‌பரின் கணினியையும் கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் நாட்டின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. கணினிக்கு சொந்தக்காரர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர்,

இந்த 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் எந்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மீறி அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற கணினி கண்காணிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com