2025இல் அதிகரித்த வாகன விற்பனை.. இதர வாகனங்களுடன் ஓர் ஒப்பீடு!
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை வேகத்தைவிட கார்கள் விற்பனை வேகம் கடந்தாண்டு அதிகரித்துள்ளது. வாகன விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு இதுகுறித்தான புள்ளிவிவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024இல் நாடெங்கும் 2 கோடியே 61 லட்சத்து 45 ஆயிரத்து 445 வாகனங்கள் விற்ற நிலையில் 2025இல் அது 7.71% அதிகரித்து 2 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 228 ஆக இருந்தது. இதில், இரு சக்கர வாகன விற்பனை ஒரு கோடியே 89 லட்சத்து 24 ஆயிரத்து 815இல் இருந்து 7.24% அதிகரித்து 2 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரத்து 650 ஆக இருந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டில் இரு சக்கர வாகன விற்பனை 7.24%, 3 சக்கர வாகன விற்பனை 7.21%, கார்கள் விற்பனை 9.7%, பிற வாகனங்கள் விற்பனை 8.45% அதிகரித்துள்ளது அப்புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. மின்சாரம் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்கள் விற்பனையும் 2025இல் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

