கிணற்றில் கவிழ்ந்த கார்pt web
இந்தியா
கொச்சி | 15 அடி ஆழ கிணற்றில் தலைக்குப்புற விழுந்த கார்.. கணவன் - மனைவி உயிரைக் காத்த சீட் பெல்ட்!
கேரள மாநிலம் கொச்சி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில், சமயோசிதமாக செயல்பட்ட கணவன், மனைவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
எர்ணாகுளம் மாவட்டம் பாங்கோடு அருகே சென்று கொண்டிருந்த கார், சாலையோரம் உள்ள 15அடி ஆழ கிணற்றில், தலைக்குப்புற கவிழ்ந்தது. உடனே காரை ஓட்டிய கார்த்தி, தனது மனைவியோடு காரின் பின்பக்கத்திற்கு இடமாறியுள்ளார்.
இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தம்பதியரையும், காரையும் மீட்டனர். கணவன், மனைவி இருவரும் முறையாக சீட் பெல்ட் அணிந்திருந்ததால், அவர்கள் காயமின்றி உயிர் தப்பியதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.