லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி!
சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாயினர்.
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரு சொகுசு காரில் டொன்கர்கரில் உள்ள பாம்லேஸ்வரி கோவிலுக் கு சென்று விட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுக்காக அந்த கோயிலுக்குச் சென்றிருந்தனர்.
நாக்பூர்-ராய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோமானி என்ற கிராமத்தின் அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண் டிருந்த லாரி மீது சொகுசு கார் பயங்கரமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த, 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர் கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.