இந்தியா
தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம்
தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலவை ஏற்றுக்கொண்டCapgemi நிறுவனம்
பிரெஞ்சு ஐடி நிறுவனமான Capgemini தன் இந்திய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று (4.3.21) அறிவித்துள்ளது அந்நிறுவனம். இது இந்தியாவில் Capgemini நிறுவனத்தை சார்ந்துள்ள ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிகிறது. மேலும் அந்நிறுவனத்தின் மருத்துவ திட்டத்தின் மூலம் பயன் அடையும் ஊழியர்களை சார்ந்தோர்களுக்கும் இது பொருந்தும் என Capgemini தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக இன்போஸிஸ் மற்றும் அக்ஸென்ச்சர் மாதிரியான நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.