குடும்பத்தைக்கூட சமாளிக்க முடியவில்லையா? - அகிலேஷை சீண்டும் பாஜக

குடும்பத்தைக்கூட சமாளிக்க முடியவில்லையா? - அகிலேஷை சீண்டும் பாஜக

குடும்பத்தைக்கூட சமாளிக்க முடியவில்லையா? - அகிலேஷை சீண்டும் பாஜக
Published on

அகிலேஷ் யாதவால் தனது சொந்த குடும்பத்தையே சமாளிக்க முடியவில்லை என பாஜகவின் கேசவ் பிரசாத் மௌரியா
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா பேசுகையில், ''அகிலேஷ் யாதவால் தனது சொந்த குடும்பத்தைக்கூட சமாளிக்க முடியவில்லை.  சட்டசபை தேர்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவ் பயப்படுகிறார். தனக்கு பாதுகாப்பான தொகுதியை தேடிக்கண்டுபிடிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறார்.

நாங்கள் ஆட்சியிலிருந்தபோது வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டோம் என்று கூறும் அவர் தேர்தலில் போட்டியிட பயப்படுவது ஏன்? அகிலேஷ் அவர்களே, 2012 முதல் 2017 வரையிலான உங்கள் ஆட்சியில் எந்தெந்த இடங்களில் வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டது என்று சொல்லுங்கள்? பாஜகவின் வளர்ச்சிப் பணிகளுடன் நீங்கள் போட்டியிட முடியாது'' என்று தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவின் இளைய மகளின் மனைவி அபர்ணா யாதவ் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், கேசவ் பிரசாத் மௌரியா அகிலேஷ்யாதவை சீண்டும் வகையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com