குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
Published on

ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாலேயே அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பாக நாடாளுமன்றமே சட்டம் இயற்ற முடியும் என கூறியுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க முடியாது. அப்படி தடை விதிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் தாங்களாகவே அடிப்படை நாகரீகத்தை கடைபிடித்து, குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் நிறுத்த கூடாது என தெரிவித்தனர்.

அரசியலில் ஊழலும், முறைகேடுகளும் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நாடாளுமன்றம் சட்டமியற்றி, அதன் மூலம் குற்றப்பின்னணி உடையவர்கள் பொதுவாழ்வுக்கு வராததை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com