cancer vaccine for women to be available in 6 months central government
model imagex page

பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி | 6 மாதங்களில் கிடைக்கும்.. மத்திய அரசு தகவல்!

”பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி இன்னும் ஆறு மாதங்களில் கிடைக்கும்” என மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
Published on

”பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி இன்னும் ஆறு மாதங்களில் கிடைக்கும்” என மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

cancer vaccine for women to be available in 6 months central government
model imagex page

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய மத்திய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ், “நாட்டில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இந்த பிரச்னையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக பகல்நேர புற்றுநோய் மையங்கள் நிறுவப்படும்.

பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுக்கான தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இது ஐந்து முதல் ஆறு மாதங்களில் கிடைக்கும். ஒன்பது முதல் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த தடுப்பூசி போட தகுதியுடையவர்கள். இந்த தடுப்பூசி, மார்பக, வாய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை எதிர்கொள்ளக்கூடியது. சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான சுங்க வரியையும் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

cancer vaccine for women to be available in 6 months central government
உங்களுக்கு புற்றுநோய் இருக்கா? எப்படி தெரிந்து கொள்வது.. அறிகுறிகள்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com