ஒரே நாளில் வைரலான கேன்சர் நோயாளியின் ட்வீட்: அன்பை பொழிந்த ட்விட்டர்வாசிகள்!

ஒரே நாளில் வைரலான கேன்சர் நோயாளியின் ட்வீட்: அன்பை பொழிந்த ட்விட்டர்வாசிகள்!

ஒரே நாளில் வைரலான கேன்சர் நோயாளியின் ட்வீட்: அன்பை பொழிந்த ட்விட்டர்வாசிகள்!
Published on

புற்றுநோயை சரியான சிகிச்சையாலும், மன தைரியத்தினாலும் எதிர்கொண்டவர்கள் பலர் உண்டு. அதற்கு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் ஒரு முக்கியமான உதாரணம். அப்படி புற்றுநோயை எதிர்த்து போராடிய பெண்ணின் ஒரு ட்விட்டர் பதிவு ஒரே நாளில் வைரலாகியுள்ளது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கேட்டி ஹெலண்ட் என்ற அந்தப்பெண் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய சிகிச்சையின் ஒரு பகுதியான chemotherapy, நிறைவு பகுதிக்கு வந்துள்ளது.



அதனை வீடியோ எடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், ''நான் அடிக்கடி ட்வீட் செய்வதில்லை. என்னை 12 பேர் மட்டுமே பின்தொடர்கிறார்கள். ஆனால் இன்று எனக்கு கடைசி chemotherapy சிகிச்சை. இதை எல்லாரிடமும் சொல்ல வேண்டும். (ஆமாம். அந்த 12 பேருக்குத்தான்)'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 12 பேர் பார்ப்பார்கள் என கேட்டி ஹெலண்ட் பதிவிட்ட பதிவு மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிட்டது. 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த பதிவை பகிர்ந்துள்ளனர். இதனை கொஞ்சமும் எதிர்பாராத கேட்டி மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்.

இந்த உலகமே என்னை கட்டி அணைத்து அன்பு செலுத்தியது போல உணர்வதாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் கேட்டி. பதிவிடுவதற்கு முன்பு 12 பின் தொடர்பவர்களை கொண்டிருந்த கேட்டியின் கணக்கு தற்போது 31 ஆயிரம் பேரை கடந்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com