இந்தியா
5 மாநில தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
5 மாநில தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்தியாவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்துள்ளது. அதற்கான பணிகளிலும் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தேர்தல் ஆணையமும் அதற்கான அனைத்து வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் 5 மாநில தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்பேரவை காலம் முடிவடைந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் என்பவர் பொதுவானவர் என்பதால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

