சொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு துறவியான கனடாவாழ் இந்தியர்
கனடாவாழ் இந்தியப் பெண் ஒருவர் சொகுசு வாழ்க்கையை உதறிவிட்டு ஜெயின் மதத் துறவியாகியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் ஹீதா குமாரி.இவர் கனடாவில் வேதியியல் பட்டம் பெற்றவர். கனடாவாழ் இந்தியரான இவர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் மறைந்த ஜெயின் மதத் துறவி சுரி மகாராஜ் என்றவரின் சொற்பொழிவை வீடியோ பதிவில் கேட்டு துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவே, ஜெயின் மத துறவியாக நேற்று தீட்சை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஹீதா குமாரி அலங்கரிக்கப்பட்ட தேரில் சாலைவழியாக பவனி வந்தார். பாட்டு நடனத்துடன் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத்தை சேர்ந்த மோஷெஷ் என்ற 24வயது இளைஞர் துறவியானார். இவருக்கு 100கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது.இவர் அதனை எல்லாம் உதறிவிட்டு துறவியானார்.
குஜராத்தில் கோடீஸ்வர வைர வியாபாரியின் 12 வயது மகனும் துறவறம் பூண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோடீஸ்வர வைர வியாபாரியின் மகன் இப்படி திடீர் துறவறம் பூண்டதில் அவனது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மற்றவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.