\
டெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்!

டெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்!

டெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்!
Published on

டெல்லி விமான நிலையத்தில், குடிவரவு அதிகாரியை தாக்கியதாக கனடா நாட்டைச் சேர்ந்தவர் நாடுகட்டத்தப்பட்டார்.

கடந்த 11 ஆம் தேதி, லுஃப்தான்சா விமானத்தில் இருந்து கனடா நாட்டுப் பயணி ஒருவர், டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குடியேற்ற அதிகாரிகள் அனுமதிக்கு பின்பே நாட்டுக்குள் நுழைய முடியும். அன்றும் வழக்கம் போல குடியேற்ற அதிகாரிகள், அந்த விமானத்தில் இருந்து வந்தவர்களின் கடவு சீட்டுகளை சோதித்தனர். அப்போது கனடா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் குடியேற்றப் படிவத்தை சரியாக நிரப்பாமல் கொண்டு வந்தார். 

குடியேற்ற அதிகாரி ஒருவர் இதுபற்றி அவரிடம் கேட்டார். இதையடுத்து அவருக்கும் கனடா நாட்டுப் பயணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, அந்த கனடா பயணி, குடியேற்ற அதிகாரியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த அதிகாரி டெல்லி விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை உடனடியாக அதே லுஃப்தான்சா விமானத்தில் நாடு கடத்தப்பட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com