இனி வாடகைக்கு ட்ராக்டரும் கிடைக்கும் - டாபே நிறுவனம் அதிரடி

இனி வாடகைக்கு ட்ராக்டரும் கிடைக்கும் - டாபே நிறுவனம் அதிரடி
இனி வாடகைக்கு ட்ராக்டரும் கிடைக்கும் - டாபே நிறுவனம் அதிரடி

டிராக்டர்கள் தயாரிப்பு நிறுவனமான டாபே நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி விவசாயிகள் எந்த விதமான நவீன விவசாய உபகரணங்களுக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. வாடகைக்கு வண்டிகள் எடுப்பது போல் இனி டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரம். பயிர் நடவு இயந்திரம் போன்ற எதையும் வாடகைக்கு எடுக்க முடியும். 

டாபே நிறுவனம் இதற்கென பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. அதற்கு J Farm என பெயரிடப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் தங்களது மொபைலில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். லோகேஷன் அடிப்படையில் டாபே நிறுவனத்தின் இயந்திரங்கள் நாள் அடிப்படையில் வாடகைக்கு கிடைக்கும். 

முன்னதாக சோதனை முயற்சி என்ற வகையில் இந்த திட்டம் குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது. அதில் விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் சுமார் 22 ஆயிரம் பேர் தங்களது வாகனங்களை இணைத்துக் கொண்டனர். இப்போது பல்வேறு மாநிலங்களிலும் லட்சக் கணக்கில் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை டாபேயின் இந்த திட்டத்தின் இணைத்துக் கொண்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com