தமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை

தமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை

தமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை
Published on

தமிழகத்தை விட பாகிஸ்தான் கலாசாரத்தோடு எளிதில் பொருந்திபோக முடியும் என பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “தமிழகம் சென்றால் என்னால் அங்குள்ள மொழியை புரிந்து கொள்ள முடியாது. அதேமசயம் ஓரிரு வார்த்தைகளை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியும். அங்குள்ள உணவு வகைகள் எனக்கு பிடிக்காது என்றில்லை. இருந்தாலும் இட்லி உள்ளிட்ட உணவு வகைகளை அதிக நாட்களுக்கு சாப்பிட முடியாது. ஆனால் பாகிஸ்தான் சென்றால் மொழி பிரச்னை கிடையாது.  உணவு என அனைத்திலும் வித்தியாசம் இருக்காது. எனவே தமிழகத்தைவிட பாகிஸ்தான் கலாசாரத்தோடு எளிதாக பொருந்திபோக முடியும்” என கூறியுள்ளார்.

இதனிடையே நவ்ஜோத் சிங்கின் பேச்சுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. மற்ற நாட்டை புகழ்வது வேண்டுமானால் தவறு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் நாட்டு மக்களை, அவர்களின் உணவு முறைகளை அவமதிப்பு தேவையற்ற செயல் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Courtesy: TheTimesOfIndia

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com