\
ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்ட குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்ட குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்ட குலாம் நபி ஆசாத்
Published on

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு உடனே டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்தான பின் குலாம் நபி ஆசாத் அங்குள்ள நிலவரங்கள் குறித்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் விவாதிக்க இன்று ஸ்ரீநகர் சென்றிருந்தார். விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஸ்ரீநகருக்குள் செல்ல தயாராக இருந்த குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமத் மிர் ஆகியோர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து குலாம் நபி ஆசாத் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதற்கிடையே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், அஜித் தோவல், சோபியான் பகுதி மக்களுடன் உரையாடிய வீடியோ குறித்து குலாம் நபி ஆசாத் கடுமையாக விமர்சித்தார். பணம் கொடுத்து யாரை வேண்டுமானாலும் அருகில் நிற்க வைத்து இப்படிப் பேசலாம் என அவர் விமர்சித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com