இந்தியா
காவல்துறைக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்: அதிர்ச்சி தகவல்
காவல்துறைக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்: அதிர்ச்சி தகவல்
லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து காவலர்கள் உடையில் கேமராவை பொருத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலர்களுக்கும் சோதனைகளில் ஈடுபடும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் உடலில் அணியக் கூடிய கேமராவை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இந்த யோசனையை எம்பி வினய் சஹஸ்ரபுத்தே தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆண்டுதோறும் 10000 கோடி ரூபாயை லஞ்சமாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அளிப்பதாக வெளியான புள்ளிவிவரத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.