\
மாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை

மாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை

மாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை
Published on: 

ரஃபேல் போர் விமான விவகாரம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கையை மாநிலங்களவைவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் பெரும் அரசியல் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முந்தைய கடைசி கூட்டத் தொடராகவும் முடிவுக்கு வரயிருக்கிறது. இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையை இன்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த முக்கியமான சிஏஜி அறிக்கையை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்திய அரசியல் சாசனத்தின் 101வது விதிபடி இந்த சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் அவர் தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட இந்த சிஏஜி அறிக்கையை  தாக்கல் செய்த பின் இதனை ஏற்க மறுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வாளகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன என நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com