இந்தியா
‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்
‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இ-சிகரெட் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இ-சிகரெட் பயன்பாட்டால் மூளை வளர்ச்சி, கற்றல் திறன் ஆகியவை பாதிக்கப்படுவதோடு மன அழுத்தம், பதற்றம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.