சி.ராமகிருஷ்ணன் எழுதிய ’மியூசிஷியன்ஸ் ஆஃப் கேரளா’ நூல் வெளியீட்டு விழா.. ஸ்ருதி அறக்கட்டளை ஏற்பாடு!
கர்நாடக இசையைப் பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் பங்காற்றியவர்களில் சி.ராமகிருஷ்ணனும் ஒருவர். இவர், மறக்கப்பட்ட இசைக்கலைஞர்களை நினைவுகூர்ந்தது மட்டுமல்லாமல், கேரளாவின் கர்நாடக இசைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து அது தொடர்பான தகவல்களையும் ஆவணப்படுத்தியிருந்தார்.
இந்த ஆவணப் பிரதி ’ஸ்ருதி அறக்கட்டளை’ மூலமாக நூலாக வெளிவர இருக்கிறது. 'மியூசிஷியன்ஸ் ஆஃப் கேரளா' (Musicians of Kerala) என்ற இந்த நூல் வெளியீட்டு விழா, ஜூலை 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகாடமி மினி ஹாலில் நடைபெற இருக்கிறது. சங்கீத கலாநிதி டாக்டர் டி.வி. கோபாலகிருஷ்ணன் இந்நூலை வெளியிட, நூலின் முதல் பிரதியை ஸ்ருதி இதழின் முன்னாள் தலைமையாசிரியர் எஸ்.ஜானகி பெற்றுக்கொள்கிறார். இந்த வெளியீட்டு விழாவில் 'கேரளீயம்' என்ற இசை நிகழ்ச்சியும் இடம்பெற இருக்கிறது.

