2024ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர்: பட்ஜெட் 2019

2024ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர்: பட்ஜெட் 2019

2024ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர்: பட்ஜெட் 2019
Published on

2024ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட் 2019ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துவருகிறார். அதில், “ தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது மிகவும் முக்கியமான குறிக்கோள். தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க தான் புதிதாக ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் குழாய் மூலமாக குடிநீர் அளிப்பதற்கு 2020ஆம் ஆண்டுக்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும். 

2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதற்காக ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com