இந்தியா
சம்பளப் பிரச்னை: புதுச்சேரி, காரைக்காலில் பஸ் ஸ்டிரைக்
சம்பளப் பிரச்னை: புதுச்சேரி, காரைக்காலில் பஸ் ஸ்டிரைக்
புதுச்சேரியில் இரண்டாவது நாளாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடந்த மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிமனையிலுள்ள பேருந்துகளை இயக்கவில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 15 நாட்களுக்கு மேல் ஆகியும் ஊதியம் வழங்காததைக் கண்டித்து பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை.

