இந்தியா
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு
பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் சம்ஹாலி என்ற பகுதியில் அதிவேகமாக வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பயணித்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதே போல் 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விபத்து நடந்தது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்கு பின்னரே விபத்து குறித்து முழு விபரம் தெரிய வரும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.