இந்தியா
உத்தரகாண்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 24 பேர் பலி
உத்தரகாண்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 24 பேர் பலி
உத்தரகாண்டில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்தனர்.
உத்தர்காசியில் இருந்து கங்கோத்ரிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்தர சிங் ராவத் அறிவித்துள்ளார்.