\
இலங்கையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உருவானது ‘புரெவி’ புயல்

இலங்கையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உருவானது ‘புரெவி’ புயல்

இலங்கையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உருவானது ‘புரெவி’ புயல்
Published on

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘புரெவி’ புயலாக உருவெடுத்தது.

நிவர் புயலைத்தொடர்ந்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும் எனவும், இது மன்னார் வளைகுடா பகுதிக்கும் வரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும், இந்தப்புயலால், தென் தமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் நாளை புயல் கரையைக் கடக்க இருப்பாதால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில், தற்போது இலங்கையின் திரிகோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது டிச.4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் கரையைக் கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com