டெல்லியில் 11 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: ’மாய வீடு’, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

டெல்லியில் 11 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: ’மாய வீடு’, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

டெல்லியில் 11 பேர் மர்மமாக உயிரிழந்த விவகாரம்: ’மாய வீடு’, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர், அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 

உயிரிழந்தவர்கள், நாராயண் தேவி (77), அவரது 2 மகன்கள் புவனேஷ் பாட்டியா (50), லலித் பாட்டியா (45), அவர்கள் மனைவி சவிதா (48), டினா (42), நாராயண் மகள் பிரதிபா (57), பேரக் குழந்தைகள் பிரியங்கா (33), நீது (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) என்பது தெரிய வந்தது. அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் தொடர்ந்து ஆய்வு நடத்தினர்.

அப்போது வீட்டிற்குள்ளேயே கோயில் கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியா சமாக இருந்ததை கண்டுபிடித்தனர். எனவே மூட நம்பிக்கையால் உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டிருந்தன.

11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டன. அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதுமட்டுமின்றி வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந் தன. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்ததால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. 

இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் என்பவரைதான். தொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் உயிரோடு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்துள்ளார். மோட்சத்தை அடைய தற்கொலைதான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரி டம் தெரிவித் துள் ளார். 

இந்த மர்ம மரணத்தின் புதிரை அவிழ்க்க போலீசார், அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர், குடும்ப சொந்தம், தொழிலதிபர்கள் உட்பட 130 பேரிடம் விசாரித்தனர். இந்நிலையில், மரணமடைந்த அந்த 11 பேரில் புவனேஷ், கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கிறார் என்கிற தகவலை தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

லலித் ஒவ்வொரு நாளும் தன் வாழ்வில் நடந்தவற்றையும், தன் குடும்பத்திற்கு கொடுத்த வழிகாட்டுதல்களையும் மறைந்த தனது தந்தை தனக்கு சொன்னதாகவும் சிலவற்றை டைரியில் எழுதி வைத்துள்ளார். அதில் ஆன்மா, இறப்பு, மோட் சம், சொர்க்கம் என பல்வேறு விஷயங்கள் உள்ளன. டைரியில், கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் தேதி எழுதப்பட்ட வற்றில், ‘தீபாவளி கொண்டாடப்பட்டுவிட்டது. யாரோ செய்த தவறால் சிலவற்றை அடைய முடியவில்லை. நீங்கள் அடுத்த தீபாவளி யை பார்க்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள்’ என்று கூறப்பட்டு ள்ளது.

மேலும், 2015- ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில் லலித்தின் அப்பா கூறியதை போல எழுதப்பட்டு ள்ளது. அதில் ‘என்னுடன் மேலும் நான்கு ஆத்மாக்கள் அலைந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் உங்களை முன்னேற்றினால் இந்த ஆன்மாக்கள் விடுபடும். ஹரித்துவாரில் அனைத்து சடங்குகளையும் முடித்துவிட்டால் ஆன்மா சாந்தியடைந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். நான் மற்ற ஆன்மாக்களோடு அலைந்துகொண்டிருக்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வீட்டில் 10 பேர் உடல்கள் தூக்கில் தொங்கியவாறும் நாராயண் தேவியின் உடல் மட்டும் தரையில் கிடந்த நிலையிலும் மீட்கப்பட்டது. அதனால் நாராயண் தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் அனைவருமே தூக்குப் போட்டு தான் இறந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ சார்பில், நடத்தப்பட்ட உளவியல் உடற்கூராய்வு (psychological autopsy) அடிப்படையில் இது தற்கொலை அல்ல, விபத்து என்று கூறப்பட்டுள்ளது. மத சடங்குகள் செய்யும் போது தவறுதலாக அவர்கள் உயிரிழந்தி ருக்கலாம் என்றும் அவர்கள் யாருக்கும் தங்கள் உயிரை விட விருப்பவில்லை என்றும் அந்த உளவியல் உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போலீசாரால் சீல் வைக்கப்பட்டிருந்த அந்த வீடு, நாராயண் தேவியின் மூத்த மகன் தினேஷ் சிங் சுந்தாவத் திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ராஜஸ்தானில் வசித்து வருகிறார். அந்த வீட்டை அந்தப் பகுதியினர் பேய் வீடு என்றும் மர்ம வீடு என்று அழைத்து வருகின்றனர். அதை, குடும்பத்தினர் கோயிலாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறி வந்தனர். ஆனால், இதை மறுத்துள்ளார் தினேஷ் சிங்.

’அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்லும் இந்த கற்பனை கதைகளைப் போக்க, நான், என் மனைவி கம்லேஷ், சகோதரி சுஜாதா, வேலைக்காரப் பெண் ஆகியோர் அந்த வீட்டில் தங்கினோம். மூன்று நாட்களாக இங்குதான் தங்கியுள்ளோம். எங்களு க்கு ஒரு பிரச்னையும் இல்லை. நிம்மதியாக தூக்கம் வந்தது. எந்த பூஜையும் செய்யாமல் இந்த வீட்டுக்குள் தங்கியது தேவை யான ஒன்று. அக்கம் பக்கத்தினரை நம்ப வைக்க வேண்டுமே. வீட்டுக்குள் உறவினர்கள் விட்டுச் சென்ற உடமைகள் அவர்களி ன் ஞாபகங்களை எங்களுக்குத் தந்தது’ என்று தெரிவித்துள்ளார் தினேஷ் சிங். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com