உ.பி,யில் சிங்கங்களுக்கும் மாட்டிறைச்சி இல்லை: பா.ஜ.க. அரசின் அதிரடி

உ.பி,யில் சிங்கங்களுக்கும் மாட்டிறைச்சி இல்லை: பா.ஜ.க. அரசின் அதிரடி

உ.பி,யில் சிங்கங்களுக்கும் மாட்டிறைச்சி இல்லை: பா.ஜ.க. அரசின் அதிரடி
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க. அரசு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி வெட்டும் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவால் கான்பூர் உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லக்னோ மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு ஒரு நாளுக்கு 235 கிலோ மாட்டு இறைச்சி உணவாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக வெறும் 80 கிலோ இறைச்சிதான் வழங்கப்படுவதாகவும் இதனால் சிங்கங்களும் புலிகளும் மட்டுமின்றி சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய்கள் மற்றும் குள்ள நரி, போன்ற மிருகங்களும் பாதிக்கப்படுவதாகவும் எட்டாவா லயன் சபாரி மிருகக்காட்சி சாலை துணை இயக்குனர் அனில் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருக்கும் மிருகங்களுக்கு உணவில் எருமை இறைச்சி பயன்படுத்தப்படுவதற்கு மாறாக ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்தால் உ.பி சிங்கங்களும் தங்களின் உணவை மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நான்கு பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com