\
trump buffalo
trump buffaloweb

Donald Trump போலவே இருக்கும் எருமை.. Selfie எடுக்க படையெடுக்கும் மக்கள்!

வங்கதேசத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல தோற்றம் கொண்ட எருமை உலகளவில் வைரலாகி உள்ளது.
Published on
Summary

ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்தில் டொனால்ட் ட்ரம்ப் என பெயரிடப்பட்ட அல்பினோ எருமைக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது. இளஞ்சிவப்பு தோல், தங்க நிற முடி காரணமாக ட்ரம்ப் தலைமுடியை நினைவூட்டும் இந்த எருமை, சமூக வலைதளங்களில் “உலகின் வித்தியாசமான எருமை” என வைரலாகி, இளைஞர்கள், குழந்தைகள் செல்பி எடுக்க வரிசையாக வருகிறார்கள்.

வங்கதேசத்தில் அரிய வகை அல்பினோ எருமை ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இளஞ்சிவப்பு நிற தோல் மற்றும் தலையில் தங்க நிற முடி போன்ற தோற்றம் கொண்ட இந்த எருமைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் சூட்டப்பட்டிருப்பது உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் இந்த எருமை சுமார் 700 கிலோ எடை கொண்டதாக கூறப்படுகிறது. தலையில் உள்ள தங்க நிற முடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமுடியை நினைவூட்டியதால், பண்ணை உரிமையாளரின் குடும்பத்தினர் அதற்கு டொனால்ட் ட்ரம்ப் என பெயர் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அரிய வகை எருமையை காண தினமும் ஏராளமான பொதுமக்கள் பண்ணைக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் எருமையுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் அந்த பண்ணை தற்போது சுற்றுலா தளம் போல மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

trump buffalo
ஈரான் போர் | அதிகாரம், எண்ணெய், செல்வாக்கு – யார் யாருக்கு என்ன வேண்டும்?

மேலும், ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு இந்த எருமைக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் எருமையின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் இதை “உலகின் வித்தியாசமான எருமை” என பதிவிட்டு வருகின்றனர்.

அதே பண்ணையில் மற்றொரு அல்பினோ எருமைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நெதன்யாகு என அழைக்கப்படும் அந்த எருமை மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு எருமைகளும் தற்போது வங்கதேச சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

trump buffalo
9 மாதங்கள்.. 61 பெண்கள்.. துன்புறுத்திய இந்திய மசாஜ் நிபுணர்.. ஆஸி.யில் சிறை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com