நேர்மையாக வரி லுத்தும் நபர்களுக்கும் விருதும், பரிசும் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்த உரையை அவர் வாசித்தார்.
அப்போது, அவர் கூறும்போது, ’வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்தும் நபர்களுக்கு விருதும் பரிசும் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.