நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி உரை நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ளார்.
இதனை அடுத்து நாளை ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இரு அமர்வுகளாக நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் மட்டுமல்லாது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான விவாதமும் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.