வருமான வரி கணக்கு உட்பட அனைத்துக்கும் பான் கார்டுக்குப் பதிலாக, ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்று நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார். அவர் கூறும்போது, ’’ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி பிடித்தம் இல்லை. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் கார்டுக்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தலாம். ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக எடுத்தால், 2 சதவி கித வரி விதிக்கப்படும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர் களுக்கு 7 சதவிகிதம் வரி விதிக்கப்படும் ’’ என்று அறிவித்தார்.