2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில், ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை வரியில்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.
2018-2019-ம் ஆண்டுக்கான நிதிநிலை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்த உரையை அவர் வாசித்தார். இதில் விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும், வருமான வரி உள்ளிட்ட பல வரி நிலவரங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி வருமான வரி குறித்து அறிவித்த ஜேட்லி, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மாத சம்பளம் வாங்குவோருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வருமான வரி விவரம்:
2.5 லட்சம் வரை வரியில்லை
2.5-5 லட்சம் வரை 5% வரி
5-10 லட்சம் வரை 20% வரி
10 லட்சத்துக்கு மேல் 30% வரி