கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் சிரமப்பட்டோருக்கு ஆறுதல் வழங்க வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரிக்கான சம்பள உச்சவரம்பில் சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வருமான வரி விலக்கு பெறுவதற்கான ஆண்டு சம்பள உச்சவரம்பு 2.5 லட்சமாக உள்ளது. இதை நான்கு லட்சமாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வருமான வரி விலக்கு பெறுவதற்கான ஆண்டு சம்பளம் 2.5 - 5 லட்சம் வரை பெறுவோருக்கு 10 சதவீத வரியும் 5 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20 சதவீத வரியும்,10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30 சதவீத வரியும் வசூலிக்கப்டுகிறது.
இந்த நடைமுறையில் சில மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.