இந்தியா
இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிதம் நேரடி முதலீடு !
இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிதம் நேரடி முதலீடு !
மத்திய பட்ஜெட்டில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
மத்திய பட்ஜெட் 2019 ஐ, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வாசித்து வருகிறார். இதில் சில முக்கிய அறிவுப்புகளை அளித்து வருகிறார். அவற்றில் சில
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும்.
- காப்பீட்டுத் துறையில் இடைநிலையில் அமைப்புகளுக்கு 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி.
- கூடுதல் அந்நிய முதலீடு சில்லறை வணிகம் மற்றும் விமானத் துறை உள்ளிட்ட துறைகளில் அனுமதிக்கப்படும்.
- ஊடகம் மற்றும் விமான துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
- உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் ஆண்டுதோறும் 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வது அவசியமாக இருக்கிறது.