ராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்றார் ராஜ்நாத் சிங்

ராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்றார் ராஜ்நாத் சிங்

ராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்றார் ராஜ்நாத் சிங்
Published on

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இதனிடையே, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். அங்கு, ராணுவ வீரர்களுக்கு அவர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதோடு, ராணுவ வீரர் ஒருவரின் சடலத்தையும் அவர் தனது தோளில் சுமந்து சென்றார். 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, புற்றுநோய் போல் பரவியுள்ள பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க கூட்டு முயற்சி தேவை என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல், பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்திற்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com