ஊழியர்களின் நவம்பர் மாதத்திற்கான சம்பளத்தை விடுவித்தது பிஎஸ்என்எல்..!

ஊழியர்களின் நவம்பர் மாதத்திற்கான சம்பளத்தை விடுவித்தது பிஎஸ்என்எல்..!
ஊழியர்களின் நவம்பர் மாதத்திற்கான சம்பளத்தை விடுவித்தது பிஎஸ்என்எல்..!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ஊழியர்களின் நவம்பர் மாத சம்பளத்திற்காக ரூ.800 கோடியை தற்போது விடுவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய பிஎஸ்என்எல்-லின் நிர்வாக இயக்குநரான பிகே புர்வார், “ ஊழியர்களின் நவம்பர் மாத சம்பளம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இன்று மாலை அல்லது நாளை காலையில் பணம் ஏறிவிடும்” எனத் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு மாத சம்பளம் எப்போது சரியான நேரத்தில் வரும் என பிகே புர்வாரிடம் கேட்டபோது, அதுகுறித்த விவரங்கள் தெரிய மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்றார். எனினும் ஜனவரி 31-ஆம் தேதிக்குப் பின் அதுகுறித்த தெளிவு ஓரளவு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார் பிஎஸ்என்எல்-லின் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்வு செய்த கிட்டத்தட்ட 70,000 ஊழியர்கள் ஜனவரி 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளனர். அதன்பின் எந்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்ற தெளிவு கிடைக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் மாதத்திற்கான சம்பளத்தை டிசம்பர் 30-ஆம் தேதி அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கழித்து, அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் விடுவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com