ராணுவத்தில் சரியாக உணவு வழங்கப்படுவதில்லை எனக் கூறி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தேஜ் பகதூர் யாதவ் என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர், கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ராணுவ வீரர்களுக்கு முறையான உணவு வழங்கப்படுவதில்லை என அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவலை பரப்பியதாக கூறி, தேஜ் பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து அவர் 3 மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.