18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அண்னன்... உடைந்த பல்லை வைத்து இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை!

உத்தரப்பிரதேசத்தில் 18 ஆண்டுகளுகு முன்பு ரயில் பயணத்தில் காணாமல் போன அண்ணனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் அடையாளம் கண்ட தங்கை... அதுவும் உடைந்த பல்லை வைத்து கண்டுபிடித்துள்ளார். தற்போது இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் - தொலைந்துபோன அண்ணனை இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை
உத்தரப்பிரதேசம் - தொலைந்துபோன அண்ணனை இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கைட்விட்டர்

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் ஹாதிபூரை சேர்ந்தவர், ராஜ்குமாரி என்ற பெண். இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் இன்ஸ்டாகிராமை ஸ்க்ரோல் செய்த போது ரீல்ஸில் வந்த ஒருமுகம், தனக்கு நன்கு தெரிந்ததை போல உணர்ந்துள்ளார் ராஜ்குமாரி. மேலும், அந்த ரீல்ஸில் வந்த நபருக்கு பல் ஒன்று உடைந்திருப்பதை கண்ட ராஜ்குமாரி, பார்ப்பதற்கு அது தன் அண்ணன் போல் இருப்பதாக சந்தேகித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் - தொலைந்துபோன அண்ணனை இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை
உத்தரப்பிரதேசம் - தொலைந்துபோன அண்ணனை இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை

தன் அண்ணன் போல கை விரல்களும் அந்நபருக்கு சற்று இறுக்கமாக இருந்தது என தெரிவித்த ராஜ்குமாரி, அந்நபர் பற்றி தீவிரமாக விசாரித்திருக்கிறார். அதன்முடிவில் 18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தன் அண்ணன் பால் கோவிந்த்தான் ரீல்ஸ் செய்தது என்பதை உறுதி செய்திருக்கிறார் ராஜ்குமாரி. தொடர்ந்து வீடியோ காலில் அழைத்து, மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார்.

முன்னதாக பால் கோவிந்த் 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைத் தேடி தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கே சென்றபோது தன் நண்பர்களிடமிருந்து தொலைந்த அவர், வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பணிகளை செய்து வந்துள்ளார். பிறகு, தனது வீட்டிற்கு செல்ல நினைத்து, கான்பூரில் ரயில் ஏறியிருக்கிறார். ஆனால் அவர் இறுதியில் சென்றடைந்ததோ ஜெய்ப்பூர்.

பிறகு அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து, ஜெய்ப்பூரில் சிறிது சிறிதாக தனது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார் கோவிந்த். மேலும் அங்கு வசித்து வந்த ஈஸ்வர் தேவி என்ற பெண்ணை திருமணமும் செய்துள்ளார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்தான், கோவிந்த் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்மூலம் தன் தங்கை ராஜ்குமாரியை தற்போது சென்றடைந்திருக்கிறார்!

உத்தரப்பிரதேசம் - தொலைந்துபோன அண்ணனை இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை
போட்டி நிறுவனங்களே இல்லாமல் பண்ண ஜியோ... இப்போது திக்குமுக்காடும் இந்திய தொலைத்தொடர்புத் துறை!

இந்நிலையில், “கட்டாயம் வீட்டிற்கு வர வேண்டும் அண்ணா” என ராஜ்குமாரி ஆவலோடு அழைக்கவே, மகிழ்ச்சியுடன் கோவிந்த் கடந்த மாதம் 20 ஆம் தேதி ராஜ்குமாரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

உத்தரப்பிரதேசம் - தொலைந்துபோன அண்ணனை இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை
உத்தரப்பிரதேசம் - தொலைந்துபோன அண்ணனை இன்ஸ்டாவில் அடையாளம் கண்ட தங்கை

இதுகுறித்து பேசியுள்ள ராஜ்குமாரி, “எனது அண்ணனை அடையாளம் கண்டுகொள்ள உறுதுணையாக இருந்தது அவரின் உடைந்த பல்தான்” என்று கூறியுள்ளது கேட்போரையும் காண்போரையும் சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘சமூக ஊடகங்களால் சிரழிவு மட்டுமே’ என்று சிலர் கூறிக்கொண்டு இருக்க, இதுபோன்ற நன்மை பயக்கும் விஷயங்களும் உருவாகி இருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com