கோவாவில் பிரிட்டீஷ் பெண் பாலியல் வன்கொடுமை!

கோவாவில் பிரிட்டீஷ் பெண் பாலியல் வன்கொடுமை!

கோவாவில் பிரிட்டீஷ் பெண் பாலியல் வன்கொடுமை!
Published on

கோவாவில் பிரிட்டீஸ் சுற்றுலா பயணி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டீசை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அடிக்கடி கோவாவுக்கு சுற்றுலா வருவது வழக்கம். கடந்த 10 வருடங்களாக அவர் வந்துகொண்டிருக்கிறார். இதனால் கோவாவின் பல பகுதிகள் அவருக்கு நன்றாக தெரியும். இந்த முறையும் கோவா வந்த அவர், கன்னகோனா அருகில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தார். இங்கு புகழ்பெற்ற அகோன்டா மற்று பலோலெம் கடற்கரை கள் உள்ளன.

இன்று காலை 4 மணியளவில் ரிசார்ட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுகொண்டிருந்தார் அந்த பெண். அப்போது, இவர் தனியாக நடந்து செல்வதை கண்ட  இளைஞர் ஒருவர், அவர் முகத்தில் குத்தினார். அவர் சுதாரிப்பதற்குள் அருகில் உள்ள வயக்காட்டுக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவர் வைத்திருந்த மூன்று பைகளையும் பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து அந்த சுற்றுலா பயணி கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சமீபகாலமாக கோவாவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com