\
குடியரசு தினவிழாவில் பங்கேற்கவிருந்த பிரிட்டன் பிரதமரின் வருகை ரத்து

குடியரசு தினவிழாவில் பங்கேற்கவிருந்த பிரிட்டன் பிரதமரின் வருகை ரத்து

குடியரசு தினவிழாவில் பங்கேற்கவிருந்த பிரிட்டன் பிரதமரின் வருகை ரத்து
Published on

குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அங்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்திருக்கிறது. இதன்காரணமாக இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விமான சேவை தற்காலிக ரத்து காரணமாக அவரின் இந்திய வருகை கேள்விக்குறியாகவே இருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக அவருடைய இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com