\
britannia
britanniapt web

பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்.. நுகர்வோரை ஏமாற்றினால் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை

100 சதவீதம் கோதுமை பிரட் மற்றும் மைதா இல்லாத பிரெட் என்ற போலி விளம்பரத்தின் மூலம் நுகர்வோரை ஏமாற்றியதாக, பிரிட்டானியா நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
Published on: 

பிரெட்டில் 100 சதவீதம் முழுமையான கோதுமை பயன்படுத்தப்படுவதாக பிரிட்டானியா நிறுவனம் விளம்பரம் செய்தது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து நடத்திய விசாரணையில், அந்த நிறுவனத்தின் பிரெட்டில் 62 சதவீதம் மட்டுமே கோதுமை இருப்பது அம்பலமானது.

britannia wheat bread
britannia wheat breadpt web

சட்டப்படி ஒரு தயாரிப்பை முழு கோதுமை பிரெட் என குறிப்பிட, அதில் குறைந்தது 75 சதவீதமாவது கோதுமை இருக்க வேண்டும். இதுகுறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் கருத்து கேட்கப்பட்டபோது, இந்த விளம்பரம் நுகர்வோரை முற்றிலும் தவறாக வழிநடத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் முதன்மை ஆணையர் நிதி காரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா அடங்கிய அமர்வு, 62 சதவீத கோதுமையைக்கொண்டு பிரெட்டை தயாரித்து விட்டு, 100 சதவீதம் எனக் கூறுவது நுகர்வோர் உரிமையை மீறும் நேர்மையற்ற வணிக முறை எனத் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, பிரிட்டானியா நிறுவனத்துக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலிருந்தும் தவறான விளம்பரத்தை பிரிட்டானியா உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com