அதீத மழையால் பாதியாக இடிந்துவிழுந்த பாலம்... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

அதீத மழையால் பாதியாக இடிந்துவிழுந்த பாலம்... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!
அதீத மழையால் பாதியாக இடிந்துவிழுந்த பாலம்... பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!
Published on

மேகலாயாவில் பாலம் ஒன்று மழையில் பாதியாக இடிந்துவிழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மேகாலயாவின் புகி என்ற ஆற்றை இணைக்க, ஜிஜிகா என்ற பகுதி முதல் மெகுவா என்ற பகுதி வரை பாலமொன்று உள்ளது. கரோ என்ற மலைப்பகுதியிலுள்ள இந்தப் பகுதிகளில், புகிதான் மூன்றாவது மிகப்பெரிய ஆறாக உள்ளது. இந்தப் பகுதியில், ஜூன் 9 முதல் ஜூன் 13 வரையில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இங்கு மட்டுமன்றி அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமின் அநேக பகுதிகளில் மிக அதிகப்படியான மழை பெய்யுமென கணிக்கப்பட்டது. குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 10 -11 தேதிகளில் 204.5 மிமி மழை கணிக்கப்பட்டது. இன்னும் இரு தினங்களில் இது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதீத மழையில் பாலமொன்று மேகாலயாவில் சரிபாதியாக இடிந்து விழுந்துள்ளது. 

பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது. நல்வாய்ப்பாக மழை எச்சரிக்கை இருப்பதால் மக்கள் அனைவரும் இதில் கவனத்தோடு இருந்துள்ளனர். இந்த வீடியோவை ஊடகங்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.

இதுவொரு பக்கமிருக்க மேகலாயா மட்டுமன்றி, அசாமிலும் மழை அச்சம் நிலவுகிறது. அதீத மழை காரணமாக கடந்த மாதம் அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 30 பேர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பருவமழை தீவிரமடைவதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாலங்கள், சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள், கட்டடங்கள் சேதமாகி வருகின்றன. அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி அசாமில் குறைந்தபட்சம் 5.61 லட்சம் மக்களாவது பாதிக்கப்பட்டிருப்பர் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை மையத்தின் மூத்த விஞ்ஞானி ஜெனமணி கூறுகையைல், `தென்மேற்கு பருவமழையானது மே 29ம் தேதி கேரளாவை தொட்டது. பின் தெற்கு, மத்திய அரபிக்கடல் பகுதிகளை சென்றடைந்தது. இதற்கிடையில் கேரளா, கர்நாடகாவின் சில பகுதிகள், தமிழ்நாடு போன்றவற்றையெல்லாம் அது கடந்தது. மே 31 முதல் ஜூன் 7 வரை இவை நடந்துள்ளது. தொடர்ந்து இது இன்னும் இரு தினங்களில் மகாராஷ்ட்ரா, மும்பையின் சில பகுதிகளை அடையுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com